» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் 300 பேர் திமுகவில் இணைந்தனர்
சனி 14, பிப்ரவரி 2026 3:14:40 PM (IST)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் (ஓபிஎஸ் அணி) தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் கருப்பூர் சீனி (எ) ராஜகோபால் தலைமையில் அந்த அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவருமான ஜி.வி. மார்கண்டேயன் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஓபிஎஸ் அணியின் விளாத்திகுளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் சின்னத்துரை, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சொரிமுத்து, புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன் மற்றும் விளாத்திகுளம் நகரச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் திமுகவின் விளாத்திகுளம் மற்றும் புதூர் ஒன்றியச் செயலாளர்கள் ராமசுப்பு, அன்புராஜன், இம்மானுவேல், மும்மூர்த்தி, செல்வராஜ், ராதாகிருஷ்ணன் மற்றும் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)

பைக் மீது அரசு பேருந்து மோதல்: இளைஞர் பலி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:00:53 AM (IST)

ஆட்சியர் காரை மறித்து அவதூறு பேசிய வாலிபர்; கார் பறிமுதல் – போலீஸ் விசாரணை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 7:56:38 AM (IST)

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)







