» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிசிடிவி கேமராவால் பயம்: திருடிய பைக்கை மீண்டும் கொண்டு வந்து நிறுத்திய மர்ம நபர்!
சனி 14, பிப்ரவரி 2026 10:14:55 AM (IST)
சாத்தான்குளத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை, அதன் உரிமையாளர் புகார் அளித்த மறுநாளே மர்ம நபர் மீண்டும் அதே இடத்தில் விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கிளைட்டன் (37). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த நேற்று முன்தினம் வியாழக்கிழமை சாத்தான்குளத்தில் நடைபெற்ற வாரச்சந்தைக்குப் பொருட்கள் வாங்குவதற்காகத் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். சந்தை பகுதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டுச் சென்ற அவர், பொருட்கள் வாங்கிவிட்டுத் திரும்பி வந்து பார்த்தபோது பைக் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி வியாபாரிகள் சங்கம் சார்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் கிளைட்டனின் பைக்கைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இது குறித்து ஆசிரியர் கிளைட்டன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
இதற்கிடையில், பைக் திருடப்படும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவியது. போலீசாரின் தேடுதல் வேட்டை மற்றும் வீடியோ வைரலானதால் பயந்துபோன மர்ம நபர், திருடிய பைக்கை நேற்றுமீண்டும் கொண்டு வந்து விட்டுச் சென்றதாகத் தெரிகிறது. மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளைப் போலீசார் முறைப்படி ஆசிரியர் கிளைட்டனிடம் ஒப்படைத்தனர். மேலும், பைக்கைத் திருடிச் சென்ற நபர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)

பைக் மீது அரசு பேருந்து மோதல்: இளைஞர் பலி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:00:53 AM (IST)

ஆட்சியர் காரை மறித்து அவதூறு பேசிய வாலிபர்; கார் பறிமுதல் – போலீஸ் விசாரணை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 7:56:38 AM (IST)

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)







