» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கலைத்திருவிழாவில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:42:58 PM (IST)

கலைத்திருவிழாவில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.02.2026), சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மனித வள மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அவர்கள் கலந்துகொண்டு, கலைத்திருவிழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
விழாவில் பேசிய அமைச்சர், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் என 30 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மாநில அளவில் வெற்றி பெற்ற 47 மாணவர்கள் மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 1,074 மாணவர்களுக்குக் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கத் தமிழக அரசு ஆண்டுதோறும் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. மாணவர்கள் உயர்நிலையை அடைவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. மாணவர்களின் வெற்றியைப் பார்த்து ஆசிரியர்கள் அடையும் மகிழ்ச்சியே அவர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய மனதிருப்தி.
நான் முதல்வன் மற்றும் உலகம் உங்கள் கையில் (மடிக்கணினி வழங்கும் திட்டம்) போன்ற திட்டங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக நலத்துறை வழங்கும் சத்தான காலை மற்றும் மதிய உணவை உண்டு மாணவர்கள் உடல் நலத்தைப் பேண வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்ட கல்வி அலுவலர்கள், தூத்துக்குடி முனியசாமி (இடைநிலை), தெட்சிணாமூர்த்தி (தொடக்கக்கல்வி), சிதம்பரநாதன் (தனியார்பள்ளி), உதவி திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மு.ச.முருகன், பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)

பைக் மீது அரசு பேருந்து மோதல்: இளைஞர் பலி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:00:53 AM (IST)

ஆட்சியர் காரை மறித்து அவதூறு பேசிய வாலிபர்; கார் பறிமுதல் – போலீஸ் விசாரணை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 7:56:38 AM (IST)

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)







