» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா!

வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:23:24 PM (IST)



தூத்துக்குடி மாவட்டம் புதூரில் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக ரூ.5.26 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தினை இன்று சென்னையிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். அந்த நிகழ்வின் தொடர்ச்சியாக புதூர் பகுதியில் நடைபெறக்கூடிய நிகழ்வில் பங்கேற்கின்ற அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் என்பது கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக சிறப்பான கட்டமைப்புடன் தமிழகம் முழுவதும் கட்டப்பட்டு வருகிறது. 

எவ்வாறு முன்னோர்கள் பழைய கட்டிடத்தினை பராமரித்து வைத்திருந்தார்களோ அதேப்போல் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த அலுவலக கட்டிடத்தினையும் நல்ல முறையில் பராமரித்து, சிறப்புற 30 - 40 ஆண்டுகளுக்கு பொலிவுற வைத்திருப்பார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். இந்த புதிய கட்டிடத்தில் பணியாற்றவுள்ள அனைத்து அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் பிரதிநிதி எந்த அளவிற்கு மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்? மற்றும் எவ்வாறு தனது நேரத்தை இந்த பணிக்காக அர்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்பது உட்பட பலவற்றை நானே விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு வருகிறேன். அந்த வகையில் இது ஒரு நல்ல அனுபவம். இங்கு இருக்கக்கூடிய பணியாளர்கள், பொறியாளர்கள் உட்பட அனைவரும் உங்களுடைய பணிகளை எந்தவித தொய்வும் இல்லாமல், எந்த விதமான காலதாமதமும் இல்லாமல் செயல்படுத்தி, அடுத்தடுத்து தனது பகுதியை சார்ந்த மக்களுக்கு அனைத்து திட்டங்களும் சென்று சேர வேண்டும் என்று கண்ணும் கருத்துமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து, அர்பணிப்பு உணர்வுடன் தனது பணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், இந்த நேரத்தில் இந்த புதிய கட்டிடத்தினை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து, இந்த நிகழ்வில் பங்கேற்பதில் எனது மகிழ்ச்சியையும், உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (பொ) நாகராஜன், ஊரக வளர்ச்சித்துறை, செயற்பொறியாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜன் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory