» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 11:14:02 AM (IST)
தூத்துக்குடியில் மூத்த வழக்கறிஞர் மறைவு காரணமாக வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்துள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர் வழக்கறிஞர் கே.சிவக்குமார் இன்று (06.02.2026) வெள்ளிக்கிழமை அதிகாலை 02.00 மணியளவில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று 06.02.2026 வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் நமது தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் நீதிமன்ற பணிகளுக்கு செல்லாமல் இருப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரங்கல் கூட்டம் நாளை 07.02.2026 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட நீதிமன்றத்திலும் அதன் பின் நமது சங்கத்திலும் வைத்து நடைபெறும். அதன்பின் வழக்கம்போல் நீதிமன்ற பணிகளுக்கு செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக வ.உ.சி. துறைமுகத்தில் ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு
வெள்ளி 6, பிப்ரவரி 2026 9:35:22 PM (IST)

பெண்ணை தாக்கி கொலை செய்த வழக்கில் 2பேர் கைது!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:31:33 PM (IST)

அம்பையில் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:10:18 PM (IST)

ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம்: கல்லூரி மாணவர்கள் ஆர்வம்
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:02:05 PM (IST)

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு புதிய திட்டம்: மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:53:16 PM (IST)

புதூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:23:24 PM (IST)









