» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:38:38 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி, குழந்தைகளுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் வந்தார். தனது 2 மகன்களுக்கும் முடிகாணிக்கை செலுத்தினார்.பின்னர் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் இருந்து வெளியே வந்த சிவகார்த்திகேயனை பக்தர்கள் சூழ்ந்து கொண்டு ‘செல்பி’ எடுத்தனர்.
பின்னர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எனது 14 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை அனைவரும் கொண்டாடுகிறார்கள். அதற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த 14 ஆண்டுகால சினிமா வாழ்க்கை நிறைய கஷ்டங்களையும், போராட்டங்களையும் கொடுத்திருக்கிறது. அதை கடந்து மக்களின் அன்புதான் மனதில் நிற்கிறது. அடுத்து நடிக்கும் புதிய படங்கள் ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்க்கும் படமாகவும், அனைவருக்கும் பிடிக்கும் படமாகவும் இருக்கும்’ என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக வ.உ.சி. துறைமுகத்தில் ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு
வெள்ளி 6, பிப்ரவரி 2026 9:35:22 PM (IST)

பெண்ணை தாக்கி கொலை செய்த வழக்கில் 2பேர் கைது!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:31:33 PM (IST)

அம்பையில் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:10:18 PM (IST)

ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம்: கல்லூரி மாணவர்கள் ஆர்வம்
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:02:05 PM (IST)

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு புதிய திட்டம்: மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:53:16 PM (IST)

புதூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:23:24 PM (IST)










கடவுள் பக்தன்Feb 6, 2026 - 08:49:03 AM | Posted IP 162.1*****