» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல்துறையினருக்கு ஆறு நாட்கள் சிறப்பு புத்தாக்க பயிற்சி : எஸ்பி சிலம்பரசன் துவக்கி வைத்தார்

திங்கள் 2, பிப்ரவரி 2026 8:46:19 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு ஆறு நாட்கள் சிறப்பு புத்தாக்க பயிற்சி வகுப்பை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு சட்ட ஒழுங்கு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள காவல்துறையினருக்கு ஆறு நாட்கள் சிறப்பு புத்தாக்க பயிற்சி வகுப்பு இன்று துவங்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு இன்று (02.02.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற புத்தாக்க பயிற்சி வகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் துவக்கி வைத்தார்.

இப்பயிற்சியில் காவல்துறையினரின் திறனை மேம்படுத்தும் வகையில் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள், காவல்துறையினர் பொதுமக்களுக்கு இடையயேயான அனுகு முறை, புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுதல், புகார் சம்பந்தமாக விசாரணை செய்வது, இரவு ரோந்து மற்றும் பகல் ரோந்தில் காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், முதல் தகவல் அறிக்கையில் காவலர்களின் பங்கு, சாட்சிகளை விரைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துதல், போக்சோ சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான எதிரான குற்றங்கள், CCTNS செயல்பாடு போன்றவற்றில் காவல்துறையினரின் பங்கு மற்றும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு புத்தாக்க பயிற்சி நடைபெற உள்ளது. இந்த புத்தாக்க பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் அனுபவம் வாய்ந்த உயர் காவல் அதிகாரிகளால் நடத்தப்பட உள்ளது.

மேற்படி இன்று துவங்கி 6 நாட்கள் நடைபெறும் புத்தாக்க பயிற்சி வகுப்பில் 62 காவல்துறையினர் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் 6 நாட்கள் இந்த புத்தாக்கி பயிற்சி தொடர்ந்து நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் உடனிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory