» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் தவறவிட்ட செல்போன்கள் ஒப்படைப்பு

திங்கள் 2, பிப்ரவரி 2026 8:41:56 PM (IST)



திருச்செந்தூர் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் தவறவிட்ட  செல்போன்கள் மற்றும் உடைமைகளை காவல்துறையினர் பத்திரமாக ஒப்படைத்தனர். 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன்  உத்தரவின் படி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் கூடுதலாக குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

திருவிழாவில்  கூட்ட நெரிசலில் காணாமல் போன பக்தர்களின் 25 குழந்தைகள் மற்றும் 9 முதியவர்கள் மீட்கப்பட்டும்,   பக்தர்கள் தவறவிட்ட 8 பைகள், 12 செல்போன்கள், ஒரு தங்க மோதிரம், 3 ரேசன் அட்டைகள், 4 வெள்ளி கொலுசுகள் மற்றும் பணம் ருபாய் 5400 ஆகியவற்றை கண்டெடுத்தும் காவல் கட்டுப்பாட்டு அறை ஒலிபெருக்கியின் மூலம் காவல்துறையினர்தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் முதியோரின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு பத்திரமாக ஒப்படைத்தனர். 

மேலும் மேற்படி உடைமைகளை தவறவிட்ட பக்தர்களை கண்டறிந்து அவர்களிடம் உடைமைகள் ஒப்படைக்கப்பட்டது. மேற்படி குழந்தைகள், முதியோர்கள், உடைமைகளை பத்திரமாக மீட்டு ஒப்படைத்து மனிதாபிமானத்துடன் செயல்பட்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சிலம்பரசன்  வெகுவாக பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory