» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!

திங்கள் 2, பிப்ரவரி 2026 5:21:27 PM (IST)

மத்திய பட்ஜெட்டை முழுமையாக படிக்காமல் ஒன்றுமே இல்லை என்று கூறுகிறார்கள். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஒன்றுமே இல்லாமல் போய்விடும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். 

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/NainarFile_1770033065.jpgபாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், "தூத்துக்குடி விமான நிலையத்திற்கு 350 கோடி ரூபாயும், திருச்சி விமான நிலையத்திற்கு 650 கோடி ரூபாயும் மத்திய அரசு வழங்கியுள்ளது. பட்ஜெட்டுக்கு முன்பே 11 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளன. 

ரேஷன் கடைகளில் மத்திய அரசு இலவசமாக வழங்கும் பொருட்களுக்குத் தங்கள் ஸ்டிக்கரை ஒட்டி மாநில அரசு விளம்பரம் தேடிக் கொள்கிறது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு 60% நிதி வழங்குகிறது என்பதை முதல்வர் மறைக்கிறார். வாக்குறுதி மீறல்களும் வரி உயர்வும்ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொத்து வரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று கூறிய திமுக, தற்போது அவற்றை 300%$ வரை உயர்த்தி மக்களை வஞ்சித்துள்ளது. 

பட்ஜெட்டைப் படிக்காமல் 'ஒன்றுமே இல்லை' என்று கூறும் முதல்வர், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒன்றுமே இல்லாமல் போவார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. கிராமங்கள் தோறும் கஞ்சா விற்பனை தங்குதடையின்றி நடக்கிறது. திமுக ஆட்சியில் இதுவரை 32 லாக்-அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன; இதில் திமுகவைச் சேர்ந்த 26 பேருக்குத் தொடர்புள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தமிழக கலாச்சாரம் தெரியவில்லை. மேடையில் நடனம் ஆடுவது ஒரு தலைவருக்கு அழகல்ல. கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த திமுக, அப்போது பாஜகவின் கிளையாகச் செயல்பட்டதா? மத்திய அரசின் 12.20 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory