» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காலத்திற்கு ஏற்றாற் போல் திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள்: அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை!
திங்கள் 2, பிப்ரவரி 2026 4:56:18 PM (IST)
.jpg)
வாய்ப்பை தவற விடக்கூடாது. காலத்திற்கு ஏற்றாற் போல் திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்று மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் அறிவரை கூறினார்.
தூத்துக்குடி மாநகராட்சி, தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (02.02.2026), தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மாணவிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: மாணவியர்களுக்கு இன்றையதினம் தமிழ்நாடு அரசின் மிதிவண்டிகளை வழங்குகின்ற நிகழ்வில் பங்கேற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய மாணவர்கள் தான் நாளைய தலைவர்கள் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? ஏனென்றால் 10 வருடங்கள் கழித்து, நீங்கள் பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர், மக்கள் பிரதிநிதி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் வரப் போகிறவர்கள் நீங்கள் தான்.
அதனால் தான், இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்று கூறுகிறோம். நாளைய தமிழ் சமுதாயமாக இருக்க கூடிய மாணவ மாணவியர்களை தகுதியுள்ளவர்களாக மாற்ற வேண்டும். தரமான கல்வியை அவர்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் மேல்நிலைப்பள்ளி கல்வி மட்டுமல்லாது, உயர்கல்வியான கல்லூரி கல்வியையும் வழங்க வேண்டும், பயிற்சி வழங்க வேண்டும் என அனைத்து திட்டங்களும், உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
பல நபர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது. ஏனென்றால், எவ்வாறு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவது? என்பது குறித்து நமது பெற்றோர்களுக்கு தெரியாது அல்லது நீங்கள் முதல் தலைமுறை பட்டதாரியாக இருக்கலாம். எனவே, அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், நமது தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும், வானவில் ஆயிரம் உள்ளிட்ட திட்டங்களும், மேலும் தமிழ்புதல்வன் திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி, உயர்வுக்கு படி, வெற்றிக்குபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதைத் தொடர்ந்து, நமது தூத்துக்குடி மாவட்டத்தில் 90 சதவீதம் மாணவ மாணவியர்கள் கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
அரசின் முயற்சியாக, எந்தவொரு மாணவ மாணவியர்களும் உயர்கல்வி கற்காமல் வீட்டில் இருக்க கூடாது எனவும், அனைவரும் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து, மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நமது மாவட்டத்தில் 90 சதவீதம் மாணவ மாணவியர்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதுதான் நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணம் ஆகும். எல்லாரும் பள்ளிக் கல்வி படிப்புடன் மட்டுமல்லாது, கல்லூரிக் கல்வி வரை படிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார்கள்.
நீங்கள் 12ஆம் வகுப்பு முடித்த பின்னர், கல்லூரியில் சேர்ந்த பின்னர் புதுமைப்பெண் என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். நீங்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை ஆகிய துறைகளின் கீழ் நீங்கள் ஏதாவது வாரியங்களில் உதவித்தொகை பெற்றாலும், உங்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை உங்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்கும், புத்தகம் வாங்குவதற்கும் அல்லது பேருந்தில் பயணம் செய்வதற்கான பயணத் தொகை ஆகிய தேவைகளுக்கு இத்தொகையினை பயன்படுத்திக் கொள்ளலாம். உயர்கல்வி படிப்பதில் தடையில்லா ஒரு கல்வியை பெற வேண்டும் என்பதற்காக மாணவியர்களுக்கான புதுமைப்பெண் என்ற திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள். இதன்மூலம் 8 இலட்சம் மாணவியர்கள் பயனடைந்திருக்கின்றனர்.

11 வருடங்கள் கழித்து, ஒரு பெண் எனது அம்மா என்னை அன்றைக்கு படிக்க வைக்கவில்லை என்று கூறி, தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டவுடன் இன்றைக்கு நான் கல்லூரியில் சேர்ந்து படிக்கின்றேன் எனவும், மேலும், பெண்கள் படிப்பதற்கான வயதை அரசு தளர்வு செய்திருப்பதால், ஒரு கல்லூரியில் தாய் மூன்றாவது வருட படிப்பையும், மகன் முதலாமாண்டு படிப்பு என தாய் மற்றும் மகன் இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டவுடன் படிப்பை இடையில் நிறுத்திய அனைத்து பெண்களும் தற்போது கல்லூரியில் சேர்ந்து படிப்பை படிக்கின்றனர். நமது தமிழ்நாடு முதலமைச்சர், திட்டங்களை நிறைவேற்றுவது மட்டுமல்லாது, அதன் பலன் மக்களை எந்த அளவிற்கு சென்றடைகிறது? எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது? எந்த அளவிற்கு மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளது? என்பதை ஆய்வு செய்து, அதற்கேற்ற வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
பெண்களுக்கு மட்டுமல்லாது, கல்லூரி படிக்கின்ற மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எந்த துறைகளின் வாயிலாகவும் உதவித்தொகை பெற்றாலும், தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து மாணவிகளும் நான் முதல்வன் திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? படிப்புக்கு பின்பு என்னென்ன வாய்ப்புகள் உள்ளது? உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
11 மற்றும் 12ஆம் வகுப்பு வரை மட்டுமல்லாது, தொடர்ச்சியாக நான் முதல்வன் திட்டத்தில் இணைந்திருக்கும் பொழுது, டிஎன்பிஎஸ்சி, யூபிஎஸ்சி என அனைத்து பயிற்சிகளும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. தொழிற் சம்பந்தமான அனைத்திற்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதன்மூலம் மானியத்தில் கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக நமது வாழ்வாதாரத்தில் உயரிய நிலை அடைவதற்கு நமது தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்கள்.
மேலும், தற்பொழுது இது போட்டி நிறைந்த உலகமாகும். ஏனென்றால் எல்லாரும் படிக்கின்றனர். நமது திறனை மேம்படுத்திக் கொள்ளும் போதுதான், நமக்கான வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, அதற்கு தகுந்தாற் போல் பள்ளி கல்லூரிகளில் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு கற்று தருகின்ற அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். வாய்ப்பை தவற விடக்கூடாது. நீங்கள் இப்பொழுதே நல்ல முறையில் படிக்க வேண்டும். நீங்கள் இந்த காலத்திற்கு ஏற்றாற் போல் உங்களை திறமையானவர்களாக உருவாக்கி கொள்ளுங்கள்.
திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள். கல்வியை மட்டும்தான் நம்மிடமிருந்து எடுத்துக் கொள்ள முடியாது. நான் எம்.காம்., பி.எட் படித்திருக்கிறேன். அதனால் நான் அநேக இடங்களில் சாதித்து வருகிறேன். பெண் என ஒதுக்க முடியாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே, கல்வி என்பது மிக முக்கியம். நாம் சிறந்த கல்வியாளராக இருக்கின்ற பொழுது, வாழ்க்கையில் எதிலும் வெற்றி அடையலாம், எதிலும் சாதனை செய்வதற்கு கல்வி மிக மிக முக்கியம்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற திருக்குறளினை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மதிப்பெண்களுக்காக படிக்காமல், குற்றமற படியுங்கள். சிறந்த அறிவாற்றல் உள்ளவர்களாக மாற வேண்டும். புத்தகம் முழுவதையும் படித்து, அதில் உள்ள அனைத்தையும் கற்றுக் கொள்ளுங்கள். ஏதேனும் தெரியவில்லை என்றால், ஆசிரியர்களிடம் கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள். அதன்படி வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும். அப்பொழுது வாழ்க்கையில் எல்லாம் வெற்றிகரமாக அமையும்.
அதேப்போல் உங்களின் உடல்நலமும் மிக முக்கியம். சாப்பாட்டினை தவிர்க்க கூடாது. அதுதான் நமக்கு ஊட்டச்சத்து தரும். சத்துள்ள உணவினை சாப்பிடுகின்ற பொழுதுதான் உடல் சீராக இயங்கும். மூளையின் வளர்ச்சி, மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். பெண்களின் ஆரோக்கியத்திற்கு கட்டாயமாக ஊட்டச்சத்துள்ள உணவு தேவை. எனவே, சத்தான உணவை சாப்பிடுங்கள். தானியவகைகள், பழங்கள், கீரை வகைகள், காய்கறிகள் ஆகிய சத்தான உணவினை சாப்பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் இருந்தால் தான், படிக்க முடியும்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமாகும். மேலும், நாம் தமிழ்மொழியை பாதுகாக்க வேண்டும். கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும். நம்முடைய மொழி, பண்பாடு மற்றும் தமிழ் மக்களை காக்க வேண்டும் என்பதில் நமது தமிழ்நாடு முதலமைச்சர் அதிக சிரத்தை எடுத்து வருகிறார்கள். அதேப்போல் நாம் எந்தவித பேதமுமின்றி, ஒவ்வொருவரும் தமிழச்சி என்பதில் ஒன்றிணைவோம். நம் இனம், மொழி மற்றும் நாட்டை காப்பது எதிர்கால தலைவர்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது.
நிச்சயமாக இந்த மிதிவண்டியினை நீங்கள் பயன்படுத்த வேண்டும். அது உங்களுக்கு நல்ல உடற்பயிற்சியாகும். உடல் வலிமையாகும். எனவே, மிதிவண்டியை பெறுகின்ற அனைவரும் அதனை ஓட்டுவதற்கு பழகிக் கொண்டு, பயன்படுத்துங்கள். உங்கள் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.60.98 லட்சம் ரொக்கம்; ரூ.4 லட்சம் மதுபானங்கள் பறிமுதல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:48:15 PM (IST)

இது விசுவாசத்திற்கும் துரோகத்திற்குமான தேர்தல்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆவேசப் பேச்சு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:36:02 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ் மீண்டும் போட்டி : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:46:00 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 460 புதிய சிசிடிவி கேமராக்கள்: எஸ்பி மதன் தொடங்கி வைத்தார்
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:34:21 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் மாணவர்களுக்கான மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:22:26 PM (IST)

திருச்செந்தூரில் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் : பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:12:14 PM (IST)