» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உலக அஞ்சல் சங்கம் சார்பில் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி: மாணவர்கள் பங்கேற்கலாம்!

திங்கள் 2, பிப்ரவரி 2026 4:07:28 PM (IST)

இந்திய அஞ்சல் துறை, உலக அஞ்சல் சங்கம் (UPU) நடத்தும் 2026 ஆம் ஆண்டிற்கான கடிதம் எழுதும் போட்டியில் 9 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். 

போட்டியின் தலைப்பு: "மின்னணு உலகில் மனித தொடர்பின் முக்கியத்துவம் குறித்து நண்பருக்கு ஒரு கடிதம் எழுதுக". இக்கடிதமானது ஆங்கிலம் அல்லது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள மொழியில்  எழுதப்பட வேண்டும். வெற்றியாளர்களுக்கு பணப்பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும். 

மாநில அளவில் முதலாம் பரிசு ₹25,000, இரண்டாம் பரிசு ₹10,000, மூன்றாம் பரிசு ₹5,000 வழங்கப்படும். தேசிய அளவில் முதலாம் பரிசு ₹50,000, இரண்டாம் பரிசு ₹25,000, மூன்றாம் பரிசு ₹10,000 வழங்கப்படும். உலக அளவில் முதலாம் பரிசு தங்கப் பதக்கம் மற்றும் சிறப்பு பரிசு, இரண்டாம் பரிசு வெள்ளிப் பதக்கம் மற்றும் சிறப்பு பரிசு, மூன்றாம் பரிசாக செம்புப் பதக்கம் மற்றும் சிறப்பு பரிசு வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வயது ஆதாரம் மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களுடன் கடிதத்தையும், விண்ணப்பத்தையும் தங்கள் பள்ளி வழியாக 15.03.2026 ஆம் தேதிக்குள் இந்த அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்: 9841875710, 9791655030 , 9942693129. இத்தகவலை தூத்துக்குடி   முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், க. செந்தில் குமார் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory