» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!

வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)



நாசரேத்தில் சபை மன்றத் தேர்தலில் எஸ்.டி.கே. அணி 100 சதவீதம் வெற்றி பெற்றதையடுத்து அணித் தலைவரும் 'லே' செயலர் வேட்பாளருமான எஸ்.டி.கே. ராஜன் வெற்றி பெற்ற அனைவரையும் நாசரேத்தில் சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் 4-வது கட்டமாக திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள், சபை மன்ற செயலாளர், ஆகியோரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி சனிக்கிழமை அனைத்து சபை மன்றங்களிலும் நடந்தது. 

இதில் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்றத்தின் சார்பில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடைபெற்ற தேர்தலில் எஸ். டி.கே. அணி சார்பில் போட்டியிட்டவர்கள் அனைத்து பதவிகளையும் கைப்பற்றி, நூறு சதவீதம் வெற்றி பெற்றனர்.

இதைத் தொடர்ந்து எஸ்.டி.கே. அணித் தலைவரும், தற்போதைய 'லே' செயலர் வேட்பாளருமான தொழிலதிபர் எஸ்.டி.கே. ராஜன் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவிக்க நாசரேத் வருகை தந்தார்.

நாசரேத் தூய யோவான் பேராலயத்திற்கு வருகை தந்த எஸ்.டி.கே. ராஜனுக்கு நாசரேத் பேராலய சேகர மன்றத்தினர் சந்தன மாலை அணிவித்து வரவேற்றனர். இதில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் மாமல்லன், ஸ்டீபன் சாலமோன், நாசரேத் சேகர பொருளாளர் லேவி அசோக் சுந்தர்ராஜ், இடையன்விளை விஜயராஜா, திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஆண்ட்ரூஸ், செல்வின், ஸ்டெல்லா அப்பாத்துரை, திலகர், சாமுவேல் வேதமாணிக்கம், மற்றும் சேகர மன்ற, சபை மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல 'லே' செயலர் வேட்பாளர் எஸ்.டி.கே. ராஜன் நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் ஜெபம் செய்தார். பின்னர் பேராலய வளாகத்தில் உள்ள கனோன் மர்காஷிஸ் ஐயரின் கல்லறையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து 'லே' செயலர் வேட்பாளர் எஸ்.டி.கே. ராஜன் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடங்கினார். நாசரேத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பெருமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். இதில் திருமண்டல செயற்குழு உறுப்பினர் ஆடிட்டர் ஜெபச்சந்திரன், முன்னாள் திருமண்டல பொருளாளர் மோகன், தூத்துக்குடி ராஜா, டி.கே.எம். ஜான்சன், அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலத்தில் இறுதி கட்டமாக வருகிற 30 ந் தேதி நாசரேத்தில் வைத்து திருமண்டல நிர்வாகிகளான 'லே' செயலர், துணைத் தலைவர், குருத்துவ காரியதரிசி, திருமண்டல பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளது. இத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory