» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கணவரை தாக்கிவிட்டு இளம்பெண் பலாத்காரம் : சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 7:58:06 AM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே கணவரை தாக்கிவிட்டு அவரது கண்முன்னே இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவத்தில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட அரசர்குளம் பகுதியில் தனியார் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்த முகமது மஹ்புல் ஹூசைன் (27) என்பவர் நெல்லை மாவட்டத்தில் பணியாளர் ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஹாலோ பிளாக் நிறுவன உரிமையாளரிடம் கமிஷன் தொகை பெற்றுக்கொண்டு அசாம் மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் மற்றும் அவரின் கணவரை வேலைக்கு சேர்த்து விட்டார்.
இந்த தம்பதி அங்கேயே தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். ஆனால் அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், சம்பளம் குறைவாக வழங்கப்பட்டதாலும் தம்பதியினர் வேலையில் இருந்து விலகுவதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் இங்கிருந்து புறப்பட்டு கேரள மாநிலத்திற்கு சென்று வேலை தேட முடிவு செய்தனர். இதற்காக சம்பவத்தன்று இருவரும் அரசர்குளத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இதுகுறித்து முகமது மஹ்புல் ஹூசைனுக்கு தெரியவந்தது. உடனே அவர் செல்போனில் தம்பதியை தொடர்புகொண்டு இங்கேயே வேலை செய்யுமாறு மிரட்டியுள்ளார். மேலும், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் செய்வதறியாது திகைத்தனர். அதற்குள் ஆட்டோ வரும் வழியை அறிந்துகொண்ட முகமது மஹ்புல் ஹூசைன், தன்னுடன் 16 மற்றும் 14 வயதுடைய சிறுவர்களை ஒரே மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு நெல்லை அருகே உள்ள சிவந்திப்பட்டி பகுதியில் காத்திருந்தார்.
அங்கு சிறிது நேரத்தில் தம்பதி பயணித்த ஆட்டோ வந்தது. அப்போது ஆட்டோவை வழிமறித்த 3 பேரும், தம்பதியை கீழே இறங்குமாறு கூறினர். இதைக்கண்ட ஆட்டோ டிரைவரிடம், உனது ஆட்டோவில் பயணித்துள்ள இவர்கள் இருவரும் கல்குவாரியில் இருந்து பணத்தை திருடிவிட்டதாக முகமது மஹ்புல் ஹூசைன் கூறினார். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறி 3 பேரும் சேர்ந்து தம்பதியை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றனர்.
அப்போது திடீரென 3 பேரும் சேர்ந்து பெண்ணின் கணவரை சரமாரி தாக்கியுள்ளனர். மேலும், அந்த இளம்பெண்ணை 3 பேரும் கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 3 பேரும் சேர்ந்து தம்பதியை மீட்டு சாலைப்பகுதியில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பலாத்காரத்தால் அதிர்ச்சியும், காயமும் ஏற்பட்டதால் இளம்பெண் கதறினார்.
அவர் தனது கணவருடன் ஆட்டோ மூலம் அங்கிருந்து புறப்பட்டு சென்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தப்பி சென்ற முகமது மஹ்புல் ஹூசைன் மற்றும் 2 சிறுவர்களை தேடி வந்தனர். நேற்று காலை அவர்கள் 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் கண் எதிரிலேயே வடமாநில இளம்பெண்ணை 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில மாநாடு: தூத்துக்குடி மருத்துவருக்கு விருது!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:46:47 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:39:25 PM (IST)

நாகம்பட்டி கல்லூரியில் 5000 மரக்கன்றுகள் நடும் விழா : ஆட்சியர் இளம் பகவத் பங்கேற்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:35:37 PM (IST)

தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:55:11 PM (IST)

பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்கிட கோரி கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:32:30 PM (IST)

சோதனை சாவடிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:23:49 PM (IST)










