» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாகம்பட்டி கல்லூரியில் 5000 மரக்கன்றுகள் நடும் விழா : ஆட்சியர் இளம் பகவத் பங்கேற்பு

செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:35:37 PM (IST)



நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் கல்லூரியில் 5000 மரக்கன்றுகள் நடும் விழா  மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் கல்லூரியில் 25- ஏக்கர் பரப்பளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தமிழ்நாடு வனத்துறை,வனச்சரகம் சார்பில் 5025-மரக்கன்றுகள் நடும் பணி விழா நடந்தது. விழாவில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி வி.மார்கண்டேயன் ஆகியோர்கள் துவக்கி வைத்தார்கள் இதைத் தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா  வனச்சரக அலுவலர் பாபு நாட்டு நல பணித்திட்டம் ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன் கல்லூரி முதல்வர் முருகானந்தம் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர் மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்  செல்வி பேராசிரியர்கள் சேதுராமன்,பவானி ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிதம்பரம் கிளைச் செயலாளர்கள் ஸ்ரீனிவாசகம்,ரகு,பெருமாள் இளைஞரணி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கஞ்சா, புகையிலை வைத்திருந்த வாலிபர் கைது!

செவ்வாய் 16, டிசம்பர் 2025 9:21:43 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory