» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில மாநாடு: தூத்துக்குடி மருத்துவருக்கு விருது!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:46:47 PM (IST)

காரைக்குடியில் நடைபெற்ற இந்திய மருத்துவ சங்கத்தின் 80வது மாநில மாநாட்டில் தூத்துக்குடி கிளை செயலாளரும், மனநல மருத்துவருமான டாக்டர் எஸ். சிவசைலத்திற்கு 'சிறந்த மருத்துவர்' விருது வழங்கப்பட்டது.
இந்திய மருத்துவ சங்கம், தமிழ்நாடு மாநில கிளை சார்பில் காரைக்குடியில் 80வது வருடாந்திர மாநில மருத்துவ மாநாடு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இம்மாநாட்டில், மருத்துவ சேவைகளில் சிறந்து விளங்கியதற்காக இந்திய மருத்துவ சங்கத்தின் தூத்துக்குடி கிளை செயலாளரும், மனநல மருத்துவருமான டாக்டர் எஸ். சிவசைலம்-க்கு 'சிறந்த மருத்துவர்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நீண்ட ஆண்டுகளாக மனிதநேயத்துடன் கூடிய மருத்துவ சேவைகளை மேற்கொண்டு வருவதையும், சமூக நலனில் ஆற்றியுள்ள அவரது பங்களிப்புகளையும் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டதாக மாநாட்டு அமைப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும், போதைப்பழக்கத்தின் தீமைகள், அதனால் ஏற்படும் மனநல பாதிப்புகள் மற்றும் அவற்றிலிருந்து விடுபடும் வழிமுறைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து மனநல ஆலோசனைகள் வழங்கியதற்காக சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.
மேலும, சர்க்கரை நோய்கள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு மருத்துவ-சமூக சேவைகளை சிறப்பாக மேற்கொண்டு வரும் இந்திய மருத்துவ சங்கத்தின் தூத்துக்குடி கிளைக்கு மேலும் ஆறு விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டது.இந்த நிகழ்வில் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில நிர்வாகிகள், தூத்துக்குடி கிளை நிர்வாகிகள், பல்வேறு துறை மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கஞ்சா, புகையிலை வைத்திருந்த வாலிபர் கைது!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 9:21:43 PM (IST)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப சாவு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 9:06:54 PM (IST)

இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நிய முதலீட்டை திரும்ப பெற வேண்டும்: ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 9:03:36 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.54.53 இலட்சம் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:54:23 PM (IST)

ஓட்டப்பிடாரம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:46:14 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:39:25 PM (IST)










