» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:44:36 PM (IST)
நாசரேத் பஜார் பகுதியில் பொதுமக்கள் அச்சுறுத்தும் வகையிலும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அரிவாளுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் கேவிகே சாமி சிலை அருகில் வாலிபர் ஒருவர் கையில் அரிவாளுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் திரிவதாக நாசரேத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாசரேத் உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஐசக் மகாராஜா,ஏட்டு நாராயணசாமி, காவலர்கள் துரைசிங், சாமுவேல்ராஜ் ஆகியோர் நாசரேத் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அரிவாள் உடன் நின்ற அம்பலச்சேரியில் வசித்து வரும் ஆறுமுகநயினார் மகன் சுடலை என்ற பீலா சுரேஷ் (27) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து அரிவாளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள சுடலை என்ற பீலா சுரேஷ் மீது களக்காடு மற்றும் மூன்றடைப்பு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)

கோவில்பட்டியில் ரயில் மோதி முதியவர் பலி!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 1:44:30 PM (IST)










