» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி முருகப் பெருமானை அவமதித்ததாக திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டன. அதன்படி, தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே, மாநகர இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பெருமாள் சரவணகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல், பொதுச் செயலாளர் நாராயண ராஜ், மாவட்ட செயலாளர் சரவணகுமார், மண்டல பொறுப்பாளர்கள் சுதாகர் மாரியப்பன் பழனி ஆண்டி முத்துகிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் சித்ராங்கதன், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் ராஜ் கண்ணு சிவ முருகா, ஆதித்தன், ராதாகிருஷ்ணன், சத்தியசீலன், உஷா தேவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி மாவட்ட துணை கண்காணிப்பாளர் திபு, நகர கண்காணிப்பாளர் மதன், தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 52 பெண்கள் உள்பட 276 பேரை கைது செய்து அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:44:36 PM (IST)

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

கோவில்பட்டியில் ரயில் மோதி முதியவர் பலி!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 1:44:30 PM (IST)










