» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் ரயில் மோதி முதியவர் பலி!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 1:44:30 PM (IST)
கோவில்பட்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கடம்பூர் ரயில் நிலையத்துக்கு இடையே லட்சுமி மில் மேம்பாலம் பின்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் 60 வயது ஒருவர் ரயில் மோதி இறந்து கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் போது ரயிலில் அடிபட்டு இறந்ததாக தெரியவந்தது. மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து ஆலம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:44:36 PM (IST)

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)










