» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)
தூத்துக்குடி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பரிதாபமாக இறந்தது.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையை அடுத்த சிறுப்பாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல் காதர். இவர் 10 மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளில் ஒன்று திரும்பி வராததால், அன்று இரவில் அதை தேடி அவரும் அவரது குடும்பத்தினரும் அலைந்தும் கிடைக்கவில்லையாம். இதனை அடுத்து காலை மீண்டும் தேடிய போது, பெரியபிராட்டி குளம் அருகே சிறுப்பாடு கிராமத்தை சேர்ந்த அற்புதராஜ் என்பவரின் வாழைத் தோட்டத்தில், அறுந்து தரையில் கிடந்த மின் கம்பியில் சிக்கி தனது மாடு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இதுகுறித்து அவர் அளித்த தகவலை அடுத்து, புதுக்கோட்டை மின்சார வாரிய அதிகாரிகளும், காவல் துறையினரும் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து மின்சார வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் மாற்று மின்கம்பிகளை பொருத்தி சீரமைக்கக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ஷேக் அப்துல் காதர் கண்ணீரோடு கூறுகையில், "கடந்த மாதம் (நவம்பர்) 25ஆம் தேதி பெய்த மழையால் இந்த மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை கண்டு, தகவல் தெரிவிப்பதற்காக புதுக்கோட்டை மின் வாரிய அலுவலகத்துக்கு சென்றேன். பூட்டி கிடந்ததால், எனக்கு தெரிந்த தூத்துக்குடி மின்வாரிய அலுவலக தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு விபரத்தை சொன்னேன்.
அதற்கு உடனே சரி செய்து விடுவதாக கூறியதால், பின்னர் அதனை சரி செய்து இருப்பார்கள் என்று நான் நினைத்து எனது வேலைகளை பார்க்க சென்று விட்டேன். மின்வாரியத்தின் அலட்சியத்தால் இப்போது ரூ. 50ஆயிரம் மதிப்பிலுள்ள எனது மாடே மின்சாரம் தாக்கி இறந்து விட்டது. இதை மருத்துவ பரிசோதனை செய்வதற்கோ, ஜேசிபி மூலம் அப்புறப்படுத்துவதற்கும் கூட என்னிடம் பணம் கிடையாது. எனக்கு மின்வாரியம் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:44:36 PM (IST)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)

கோவில்பட்டியில் ரயில் மோதி முதியவர் பலி!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 1:44:30 PM (IST)










