» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நவதிருப்பதி கோவில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு!

ஞாயிறு 21, செப்டம்பர் 2025 9:38:45 AM (IST)



புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி நவதிருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி நவதிருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனர், திருப்புளியங்குடி காய்சினிவேந்தன், இரட்டை திருப்பதி தேவர்பிரான், அரவிந்தலோசனர், பெருங்குளம் மாயகூத்தர், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில்களில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், திருமஞ்சனம், தீபாராதனை, கோஷ்டி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் கோவில்களுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு சென்று திரும்பும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் முதியோர்களுக்கான ஆன்மிக நவதிருப்பதி சுற்றுலாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் 41 முதியோர் இலவசமாக ஆன்மிக நவதிருப்பதி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு குடிநீர், பிஸ்கெட் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி (பொறுப்பு) சதீஷ், ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory