» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிக கட்டணம் வசூலித்த மினி பஸ்களுக்கு அபராதம் : வாகனங்களில் ஏர்ஹாரன் பறிமுதல்

ஞாயிறு 21, செப்டம்பர் 2025 9:22:12 AM (IST)



கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூலித்த 2 மினி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிக ஒலி எழுப்பும் வாகனங்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் முதியவர்கள், நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்ஸன் மாசிலாமணி ஆகியோர் கோவில்பட்டி நகர பகுதிகளில் திடீர் வாகன சோதனை நடத்தினார்கள்.

சோதனையின் போது தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பயன்படுத்துவதை அகற்றி, 4 பஸ்களுக்கு அபராத அறிக்கை வழங்கப்பட்டது. இதேபோல அனுமதிக்கப்பட்ட வழி தடங்களில் இயக்காமலும், அதிக கட்டணம் வசூலித்த 2 மினி பஸ்களுக்கு அபராத அறிக்கை வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory