» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் தேசிய ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்: கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
ஞாயிறு 21, செப்டம்பர் 2025 9:13:40 AM (IST)

கோவில்பட்டியில் தேசிய ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. வலியுறுத்தி பேசினார்.
கோவில்பட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது: முன்பு தீப்பெட்டிக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. எனவே வரியை குறைக்குமாறு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தோம். அவர் ஒரு மாதத்தில் வரியை 12 சதவீதமாக குறைத்தார். தற்போது 12 சதவீத வரியையும் 5 சதவீதமாக குறைத்து விட்டார்.
கோவில்பட்டி தீப்பெட்டி தொழிலுக்கு மட்டுமல்லாமல் பஞ்சாலை தொழிலுக்கும் பெயர் பெற்றது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறது. எனவே, அதையும் பரிசீலித்து கோவில்பட்டியில் தேசிய ஜவுளி பூங்கா அமைத்துக் கொடுத்தால் இந்த பகுதி மேலும் வளர்ச்சி அடையும்.
சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்கிறது. அதேபோல் நெல்லை- சென்னை வந்தே பாரத் ரெயிலும் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும். பிரதமர் மோடியால் தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு விமானங்கள் இயக்க வேண்டும். சிகரெட் லைட்டரையும் தடை செய்ய வேண்டும்.
கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெற்று தந்தது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தான். அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அதேபோன்று சிவகாசி, கோவில்பட்டி தீப்பெட்டிக்கும் புவிசார் குறியீடு பெற்று தர வேண்டும். வில்லிசேரி கிராமத்துக்கு தேசிய வங்கி கிளை அமைத்து கொடுத்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: மோடியை போன்ற பிரதமரை இதுவரை யாரும் பார்த்ததில்லை. அவர் ஜி.எஸ்.டி. வரியை வெகுவாக குறைத்து அனைவருக்கும் தீபாவளி பரிசு வழங்கி உள்ளார். தீப்பெட்டி தொழில் மேலும் மேம்பட வேண்டும். இதனை நம்பி உள்ள 1½ லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க துணை தலைவர் கே.ராஜூ, செயலாளர் கோபால்சாமி, தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் வரதராஜன், பொருளாளர் ராஜவேல், நிர்வாகி ரத்தன்ராஜ், பா.ஜனதா மாவட்ட தலைவர் சரவணகிருஷ்ணன், பொதுச்செயலாளர் வேல்ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர். தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் காமரின் விஜய் ஆனந்த் நன்றி கூறினார். நிகழ்ச்சியை அன்ன பாரதி தொகுத்து வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










