» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மீன் சந்தையில் மீன்களை திருடியவர் கைது
ஞாயிறு 21, செப்டம்பர் 2025 8:58:52 AM (IST)
சாத்தான்குளத்தில் மீன் சந்தையில் புகுந்து 21 கிலோ மீன்களை திருடி சென்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஞானராஜ் மகன் முரசொலி மாறன். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் விற்பனை முடிந்ததும் பதப்படுத்திய மீன்களை சந்தையில் வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று வந்து பார்த்தபோது 21 கிலோ மீன்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து முரசொலி மாறன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், மீன்களை திருடிய நபர் சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரத்தை சேர்ந்த தங்கத்துரை மகன் அப்பாதுரை (55) எனவும், தெருவில் கிடக்கும் காலி பாட்டில்களை சேகரித்து விற்பவர் எனவும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட மீன்களை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










