» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசை தசரா திருவிழா பாதுகாப்புப் பணியில் 4,000 போலீசார்: ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்!

ஞாயிறு 21, செப்டம்பர் 2025 8:53:33 AM (IST)

குலசை தசரா திருவிழா பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என கோட்டாட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் செப். 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக். 2ஆம் தேதி மகிசா சூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறும். பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பான அரசுத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கௌதம் தலைமையில்  திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார், வட்டாட்சியர் பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கரன், கோயில் செயல் அலுவலர் வள்ளிநாயகம் ஆகியோர் முன்னிலையில்  நடந்தது.

கூட்டத்தில்,  பக்தர்கள் வசதிக்காக 25 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பந்தல்கள், 280 கழிப்பிடங்கள், தற்காலிக பேருந்து நிறுத்தம், 6 இடங்களில் வாகன நிறுத்தங்கள், தரிசனத்துக்கு கூடுதல் வரிசைப் பாதை, 64 கண்காணிப்பு கேமராக்கள், 24 மணி நேர மருத்துவ வசதி, தயார் நிலையில் தீயணைப்பு வாகனம், 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள், கொடியேற்ற நாளில் 1000 போலீசாரும், அக். 1, 2ஆம் தேதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்பது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory