» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் செப். 24 முதல் 20 பெட்டிகளுடன் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி
சனி 20, செப்டம்பர் 2025 9:08:38 PM (IST)
நெல்லை_சென்னை வந்தே பாரத் ரயிலானது வருகிற செப்டம்பர் 24 ந் தேதி புதன்கிழமை முதல் 20 பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே மதுரை மண்டலம் அறிவித்துள்ளது.
நெல்லை-சென்னை இடையே பகல் நேரத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலானது, நெல்லையில் இருந்து வண்டி எண் 20666 காலை 6.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 சென்னை எழும்பூரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து வந்தேபாரத் ரயில் வண்டி எண் 20665 மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லையை வந்தடைகிறது.
ஆரம்பத்தில் இந்த வந்தேபாரத் ரயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. பயணிகளின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டன. தற்போது, 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று வருகிற 24-ந் தேதி முதல் மேலும் 4 பெட்டிகள், அதாவது இதில், 18 சேர் கார் பெட்டிகளும், 2 எக்சிகியூட்டிவ் சேர் கார் பெட்டிகளுடன் மொத்தம் 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது என தென்னக ரயில்வே மதுரை மண்டலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால் கூடுதலாக 312 பேர் இந்த ரயிலில் பயணம் செய்யலாம். மேலும் ஒரே நேரத்தில் 1440 பயணிகள் வந்தேபாரத் ரயிலில் செல்ல முடியும் என்பதால் தமிழக தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










