» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்களுக்கு எதிரான இணைய குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்!

சனி 20, செப்டம்பர் 2025 3:25:41 PM (IST)



தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா, சைபர் கிரைம் சொசைட்டி ஆப் இந்தியா மற்றும் தூய மரியன்னை கல்லூரி சார்பில் பெண்களுக்கு எதிரான இணைய குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் எம்பவர் இந்தியா கௌரவ செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினருமான ஆ.சங்கர் தலைமை வகித்து பேசும் போது கூறியதாவது : பாதுகாப்பான டிஜிட்டல் பயணத்திற்கு ஒவ்வொருவரின் பொறுப்பும், பங்களிப்பும் அவசியம். அறிமுகமில்லாதவர்கள் ஏடிஎம் அருகில் நின்று எங்களிடம் ஏடிஎம் கார்டு இல்லை எனவும், மிகவும் அவசரமாக எனக்கு பணம் தேவைப்படுகின்றது என்றும், வெளியூரிலுள்ள என்னுடைய உறவினர் உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புவர் அதை நீங்கள் உங்களது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்துத் தாருங்கள் எனக் கூறினால் அவர்களை நம்பாதீர்கள். உங்களை அறியாமல் மோசடி வலையில் சிக்கி விடுவீர்கள். ஆகவே அறிமுகமில்லாதவர்களுக்கு பணம் எடுத்து கொடுக்காதீர்கள் எனக் கூறினார்.

கருத்தரங்கத்தை மாவட்ட இணைய குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் துவக்கி வைத்தார். தூய மரியன்னை கல்லூரி முதல்வர் ஜெசி வாழ்த்துரை வழங்கினார். பெண்கள் மீது நடைபெறும் இணைய குற்றங்கள், வழக்குகள் மற்றும் அதன் நடைமுறைகளை சைபர் கிரைம் சொசைட்டி ஆப் இந்தியா தலைவர் பாலு சுவாமிநாதன் எடுத்துரைத்தார். 

இணைய குற்றங்களின் தொழில் நுட்ப அம்சங்களை சைபர் கிரைம் சொசைட்டி ஆப் இந்தியா செயலாளர் விஜயகுமார் விளக்கிக் கூறினார். முன்னதாக பொருளாதாரத்துறை பேராசிரியை ரதி வரவேற்றார். மாணவி முத்து மதுமிதா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூய மரியன்னை கல்லூரியின் நுகர்வோர் மற்றும் மனித உரிமை மன்றங்களின் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory