» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை : போலீஸ் விசாரணை
சனி 13, செப்டம்பர் 2025 11:59:47 AM (IST)
தூத்துக்குடி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்த வாலிபர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அன்னை தெரேசா மீனவர் காலனியைச் சேர்ந்தவர் எட்வர்ட் மகன் வினிஸ்டன் (30). இவர் தாளமுத்து நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். தருவைகுளம் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார், இந்த நிலையில், தாய்நகர் சுனாமி காலனி சேர்ந்த கஸ்தூரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
கஸ்தூரிக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வாரங்களாக பிரிந்து இருந்தனர். இதனால் வினிஸ்டன் அன்னை தெரசா மீனவர் காலனி பகுதியில் உள்ள அம்மா வீட்டில் குடியிருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சனி 20, டிசம்பர் 2025 5:03:03 PM (IST)

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)










