» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: 2பேர் கைது!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 4:33:35 PM (IST)
தூத்துக்குடியில் முன் விரோதத்தில் கல்லூரி மாணவரை அரிவாளால் தாக்கிய மற்றொரு மாணவர் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் ராமர் மகன் செண்பகராஜ் (18). முருகன் மகன் பலவேசம். இவர்கள் இருவரும் நண்பர்கள், தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். அதே கல்லூரியில் படித்து வரும் முத்துக்குமரன் மகன் ஆதித்யா (19) என்பவருக்கும் பலவேசத்துக்கும் இடையே முன் விரோதம் காரணமாக நேற்று பிற்பகலில் சண்டை ஏற்பட்டது.
இதனை செண்பகராஜ் தடுத்து சமாதானப் படுத்தினாராம். இதனால் அவர் மீது ஆத்திரம் அடைந்த ஆதித்யா மற்றும் அவரது உறவினரான லட்சுமணன் மகன் சிவச்சந்திரன்(27) ஆகிய 2பேரும் சேர்ந்து நேற்று இரவு லெவிஞ்சிபுரம் 1வது தெரு, மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த செண்பகராஜை அரிவாளால் தாக்கியுள்ளனர்.
இதைத் தடுக்க முயன்ற முனியசாமிபுரம் ராமநாதன் மகன் சக்தி (21) என்பவரையும் செங்கலால் தாக்கினார்களாம். இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் காவுராஜன் வழக்குப் பதிந்து, ஆதித்யா மற்றும் சிவச்சந்திரன் ஆகிய 2பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சனி 20, டிசம்பர் 2025 5:03:03 PM (IST)

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)










