» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எட்டயபுரத்தில் இளம் பாரதிகள் உறுதிமொழி ஏற்பு!

வெள்ளி 12, செப்டம்பர் 2025 3:10:05 PM (IST)



எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தில் ரோட்டரி சங்கம், பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் மகாகவி பாரதியின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

நாடு முழுவதும் செப்-12ம் தேதி மகாகவி பாரதியின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. எட்டயபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க செயலாளர் பழனிகுமார் அனைவரையும் வரவேற்றார். 

இதில், தமிழ் பாப்திஸ்துபள்ளி, மாரியப்பன் நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 60-க்கும் மேற்பட்டோர் பாரதியார் வேடம் அணிந்து எட்டையாபுரம் பாரதியார் நினைவு மணிமண்டபத்தின் முன்பு பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடவும், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சரியான உணவு பழக்கங்களை மேற்கொண்டு, புற்றுநோயை தடுத்து நிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தவும். சுற்றுச்சூழலை பாதுகாத்து பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும், நாட்டின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் பாடுபட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் கலந்து கொண்டு மகாகவி பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இளம் பாரதிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். இதில் பணி நிறைவு பெற்ற வருவாய் துறைஅலுவலர் பொன் பரமானந்தம், ரோட்டரி சங்க நிர்வாகிகள், சீனிவாசன், முத்துச்செல்வம், கருப்பசாமி,  பூல்பாண்டி,  இளங்கோ,  நடராஜன், கிருஷ்ணசாமி,  கண்ணன் வர்ஷன், மாரியப்ப நாடார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சேர்மத்தாய், தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் லால்பகதூர் கென்னடிஉள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ரோட்டரி சங்க பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory