» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலயம், அக்னிசட்டி ஊர்வலம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:50:58 PM (IST)

எட்டையாபுரத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 85வது அவதார பெருவிழாவை முன்னிட்டு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலயம், அக்னிசட்டி, பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வடக்கு சேனையர் 3வது தெருவில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் 85வது அவதார பெருவிழா கஞ்சி கலயம் அக்னிசட்டி பால் குடம், அன்னதானம் நடைபெற்றது. எட்டையபுரம் பேரூராட்சி தலைவி ராமலெட்சுமி சங்கர நாராயணன் விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
கஞ்சி கலயம், அக்னிசட்டி, பால் குடம் ஊர்வலத்தை மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி தொடங்கி வைத்தார். கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி சக்தி கொடியை ஏற்றி வைத்தார். ஏழை, எளிய மக்களுக்கு சமுதாயப்பணியாக சேலைகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் வழங்கினார்.

அன்னதான நிகழ்ச்சியை எஸ்.ஆர்.பி.ஸ்டோர் சக்தி பிச்சைக்குட்டி துவக்கி வைத்தார். விழாவில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி, திருவிக நகர் சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், எம்.ஜி.ஆர்.நகர் மன்ற தலைவி செல்வி, மன்ற பொறுப்பாளர்கள் சக்தி கண்ணாயிரம், முத்து, சீத்தாலட்சுமி, மாரியம்மாள், மகாலெட்சுமி ராஜலெட்சுமி, மாரீஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மன்ற தலைவி கண்ணா தலைமையில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சனி 20, டிசம்பர் 2025 5:03:03 PM (IST)

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)










