» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 12:28:40 PM (IST)
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை ஒட்டி தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் உருவானது. இது நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது.
மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா மற்றும் வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரைகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அமைந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று அதிகாலை தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா கடற்கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் வங்கக்கடலின் வடக்குப்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது குறித்து மீனவர்களுக்கும், கப்பல்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதுபோல் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.60.98 லட்சம் ரொக்கம்; ரூ.4 லட்சம் மதுபானங்கள் பறிமுதல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:48:15 PM (IST)

இது விசுவாசத்திற்கும் துரோகத்திற்குமான தேர்தல்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆவேசப் பேச்சு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:36:02 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ் மீண்டும் போட்டி : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:46:00 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 460 புதிய சிசிடிவி கேமராக்கள்: எஸ்பி மதன் தொடங்கி வைத்தார்
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:34:21 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் மாணவர்களுக்கான மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:22:26 PM (IST)

திருச்செந்தூரில் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் : பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:12:14 PM (IST)







