» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
ஞாயிறு 22, ஜூன் 2025 11:36:24 AM (IST)

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தில் தேர்தல் மூலம் சங்கத் தலைவராக எஸ்.பி. வாரியார் துணைத் தலைவராக சிவசங்கர், செயலாளராக செல்வின், இணைச் செயலாளராக பாலகுமாரன், பொருளாளராக கணேசன், மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக அரிமுருகன், சார்லஸ், மணிகண்டன், முனீஸ்குமார், ராஜ்குமார், ரமேஷ் செல்வகுமார், விக்னேஷ், முருகன், பிரவீன்குமார், ஸ்ரீநாத் ஆனந்த், தமிழ்செல்வி, யூஜியானா, உஷா, ரெக்ஸ் அன்டோ ரோஷிடா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில், வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கனி திருமண மண்டபத்தில் நடந்தது. மூத்த வழக்கறிஞர் ஏ.டபுள்யூ.டி. திலக் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் தனசேகர் டேவிட் தலைமை வகித்து, புதிய தலைவரான எஸ்பி வாரியாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி தாண்டவன் மகிளா நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி முருகன், சார்பு நீதிமன்ற நீதிபதி ஜேசுராஜ் செல்வம், உரிமைகள் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம், நீதிபதிகள் பாக்யராஜ், சிவஸ்ரீ, மூத்த வழக்கறிஞர்கள் சொக்கலிங்கம், ஐ.பி. பாலசேகர், பால் ஆசீர், எஸ்.எஸ்.பி.அசோக், சுரேஷ், ரூபஸ் அமிர்தராஜ், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரூஸ் மணி, அரசு வழக்கறிஞர்கள் எல்லம்மாள், ஆனந்த கபிரியேல், சேவியர். ஞானப்பிரகாசம், என்.வி. ரவீந்திரன், செங்குட்டுவன், பிள்ளை விநாயகம் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










