» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!

திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)



தூத்துக்குடியில் திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் செய்ததாக சமூகநலத்துறை அலுவல் சாரா உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இது தொடர்பாக திருநங்கைகள் அளித்த மனுவில் "தூத்துக்குடியில் மொத்தம் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட தமிழக அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த நலத்திட்ட உதவிகள் அனைத்தும் எல்லா திருநங்கைகளுக்கும் பயன்படாமல் ஒரு குறிப்பிட்ட திருநங்கைகளுக்கு மட்டும் பயன்படுகிறது.

தமிழக அரசிடம் இருந்து எங்களுக்கு வருடம் மானியமாக ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தூத்துக்குடியில் இருக்கும் சமூகநலத்துறை அலுவல் சாரா உறுப்பினர் ரீமா என்பவர் அனைவருக்கும் வழங்காமல் தன்னைச் சார்ந்து உள்ள ஒரு குறிப்பிட்ட சில திருநங்கைகளுக்கும் மட்டும் வழங்கி வருகிறார். மேலும் எல்லா திருநங்கைகளுக்கும் அந்த உதவித்தொகை பெற வேண்டுமானால் தனக்கு ரூ.10,000 லஞ்சம் வேண்டும் என்று கூறுகிறார். 

இதனால் தூத்துக்குடியில் உள்ள பல திருநங்கைகள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். மேலும் தூத்துக்குடியில் உள்ள திருநங்கைகளின் நலனுக்காக உதவ வரும் தன்னார்வ அமைப்புகளிடமிருந்து நன்கொடையாக பல லட்சங்கள் பெற்று அதை தன் சுயநலனுக்காக மட்டும் பயன்படுத்தி வருகிறார். இவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் திருநங்கைகளுக்கு கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுகிறார். 

சமீபமாக திருநங்கைகளை வீடு புகுந்து அடித்தும் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வருகிறார். இதனால் திருநங்கைகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். திருநங்கைகளை இந்த சமூகம் மதிப்பளித்து வந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் செயல்களினால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகிறது.

கந்து வட்டிக்கு திருநங்கைகளுக்கு பணம் கொடுத்து அதற்கு வட்டி கொடுக்க      முடியாமல் திணறி வரும் திருநங்கைகளை தன் அடிமை போல நடத்தி அவர்களை தன் வீட்டில் வைத்து சுயலாபத்திற்காக பயன்படுத்தி வருகிறார். இத்தகைய கொடூரமான செயல்களை செய்து வரும் ரீமா என்பவரை சமூக நலத்துறை அலுவல் சாரா உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கவும் மேலும் அவர் செய்த அனைத்து குற்ற செயல்களுக்கான தண்டலையும் அவருக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory