» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 18, ஜூன் 2025 5:15:21 PM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் அவரது தந்தைக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த புலமாடன் மகன் வண்ணமுத்து (65) மற்றும் அவரது மனைவி உலகம்மாள் ஆகிய இருவரையும் அவர்களது வீட்டருகே வைத்து கடந்த 12.05.2018 அன்று நில பிரச்சினை காரணமாக புதுக்குடி உலகம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லதுரை பாண்டியன் மகன் மாயாண்டி (எ) ரவி (62) மற்றும் அவரது மனைவி, அவரது மகன் ஜோதி மணிகண்டன் (28) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தவறாக பேசி கை, கம்பு மற்றும் அரிவாளால் தாக்கிய வழக்கில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாயாண்டி (எ) ரவி, அவரது மனைவி மற்றும் ஜோதி மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் இன்று குற்றவாளிகளான மாயாண்டி (எ) ரவிக்கு சட்டப்பிரிவு 323ன் படி ஒரு வருடம் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1000 அபராதமும், ஜோதி மணிகண்டன் என்பவருக்கு சட்டப்பிரிவு 307ன் படி 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5,000 அபராதமும், மாயாண்டி (எ) ரவியின் மனைவியை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் சந்திரா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










