» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீடுகளுக்கான ரூஃப்டாப் சோலார் திட்டம்: மாநகராட்சி சார்பில் நாளை சிறப்பு முகாம்!
சனி 14, ஜூன் 2025 10:12:36 AM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சூரிய மேற்கூரை மின் அமைப்புகள் குறித்த சிறப்பு முகாம் நாளை (15ம் தேதி) நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியானது சூரிய மேற்கூரை மின் அமைப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இந்திய அரசின் பிரதமர் சூரியகர்: முஃப்த் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ், வீடுகளுக்கான ரூஃப்டாப் சோலார் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விதமாக, வரும் 15.06.2025 (ஞாயிறு) அன்று, ஒரு நாள் சிறப்பு முகாம்களை, நடத்த உத்தேசித்துள்ளது.
இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, மாநகராட்சிக்கு சொந்தமான சிதம்பரநகர் வணிக வளாகம், டூவிபுரம் தாலுகா அலுவலகம், வடக்கு மண்டல அலுவலகம், தருவை மைதானம் மற்றும் குறிஞ்சி நகர் கரிசல் இலக்கிய பூங்கா ஆகிய ஐந்து இடங்களில் நடைபெற உள்ளது.
மேற்படி இந்த முகாம்களில் பிரதமரின் சூரிய சக்தி மின் வீடு: இலவச மின்சார திட்டத்தை பற்றியும், ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி, மற்றும் மானியம் பெறும் செயல்முறை ஆகியவற்றை, அரசு அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்கள் பங்கேற்று, பொதுமக்களுக்கு தேவையான விளக்கங்களை வழங்குவார்கள். எனவே, பொதுமக்கள் இம்முகாம்களில் பங்கு பெற்று பயன் பெறுமாறு மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










