» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கப்பல் ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த 3பேர் கைது : 32 பவுன் நகைகள் மீட்பு
வெள்ளி 13, ஜூன் 2025 11:51:07 AM (IST)
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற கப்பல் ஊழியர் வீட்டில் நகை கொள்ளையடித்த வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்தனர். 32 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, மாதா கோவில் தெருவைச் சேர்த செல்லையா மகன் கில்பர்ட் (73), கப்பலில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் மற்றும் மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி கில்பர்ட் வீட்டை பூட்டிவிட்டு, கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஊர் திரும்பினார். அப்போது அவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 32 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கில்பர்ட் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி சகாய புரத்தைச் சேர்ந்த டொமினிக் மகன் ஆக்னல் (30), கரிக்கலன் காலனி கடலரசன் மகன் அரவிந்த் (22), முத்தையாபுரம் ராஜீவ் நகர் ரவி மகன் கண்ணன் (25) ஆகிய 3பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 32 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
SivaSriJun 13, 2025 - 04:49:18 PM | Posted IP 162.1*****
விலைவாசி உயர்வு, வேலைக்கு ஏற்ற ஊதியம் இல்லை , வேலை கிடைக்க வில்லை, அப்போது கட்டாய கல்வி இல்லை, கல்வி இடைநிறுத்தம் செய்தால் பின் தொடர்பு இல்லை, போதை இல்லை, ஆசிரியர் பிரம்பு எடுத்தார்கள்., கூலிப்படை, இளைஞர்களை தட்டி கேட்டால் அவன் ஆயுதத்தால் பதில் சொல்கிறான்,இவனை வெளியே வர ஜாமீன் எடுத்து தன் கையில் வைத்துக் கொள்ள பெரிய புள்ளி.அலைபேசியால் தொடர்பு கை வரிசை காட்ட, நேர்மையான ஆட்சி மலர்ந்தால் பகல் இரவு ட்ரோன் மூலம் நம்பிக்கை பணியாளர்களை வைத்தால் ஊருக்கு ஊர் எங்கே செல்கிறார் என்று தொடர்பு தெரிந்து விடும்.குற்றம் உள்ளவன் நடமாட மாட்டான் உழைக்க உறுதி எடுப்பான்.நன்றி
செய்தி படிப்பவன்Jun 13, 2025 - 12:35:52 PM | Posted IP 162.1*****
அந்த 3 திருடர்கள் படத்தை வெளியிடுங்கள்
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)











ஆமாம்Jun 15, 2025 - 11:59:41 AM | Posted IP 172.7*****