» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி

புதன் 11, ஜூன் 2025 3:15:21 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. 

தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடியில் "நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு” என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. மொத்தம் 60 விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர். இப்பயிற்சியினை மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையும், ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் பவானிசாகர்  வேளாண் துறை மூலம்    வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையுடன் இணைந்து நடத்தியது.

இப்பயிற்சியில் நன்னீரில் வளர்க்கப்படும் பல்வேறு முக்கியமான அலங்கார மீன் இனங்கள், முட்டை மற்றும் குட்டி ஈனும் அலங்கார மீன் இனங்களின் இனப்பெருக்கம், நீர்தரக் கட்டுப்பாடு, நோய் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் குறித்த தொழில்நுட்பங்கள் கற்பிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு களப்பயிற்சி அனுபவம் சாயர்புரத்தில் அமைந்துள்ள சித்தா அக்வா அலங்கார மீன் பண்ணையில் வைத்து அளிக்கப்பட்டது. 

தூத்துக்குடி, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர்  ப.அகிலன்  தலைமையுரையில் நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பில் புதிதாக தொழில் துவங்கி நன்முறையில் லாபம் பெற்று பயனடைய வேண்டுமென்று பயிற்சியாளர்களை ஊக்குவித்தார். இப்பயிற்சியை  உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் (பொ) கோ. அருள் ஓளி, ஒருங்கிணைப்பில் உதவிப் பேராசிரியர்கள் பூ. மணிகண்டன்,  வெ. கோமதி மற்றும் ம. கீதா ஆகியோர் நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory