» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

திங்கள் 9, ஜூன் 2025 8:56:14 AM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நேற்று வைகாசி திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

நவதிருப்பதிகளில் 9-ம் தலமாகவும், குருவுக்கு அதிபதியுமாகவும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதா் ஆழ்வார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் மூலவா் ஆதிநாதா் நின்ற திருக்கோலத்திலும், ஆதிநாயகி, குருகூா்வல்லி ஆகிய 2 அம்பாள்களும் அருள்பாலிக்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் சுவாமி நம்மாழ்வார் வைகாசி விசாகம் அன்று திருஅவதாரம் செய்தார். அவரது அவதாரத்தை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடந்து வருகிறது. முக்கிய விழாக்களில் ஒன்றான மங்களாசாசனம் கடந்த 4 -ந் தேதி நடைபெற்றது. அன்று காலையில் நம்மாழ்வார் நவ திருப்பதி பெருமாள்களுக்கு ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் முன்பு மங்களாசாசனம் செய்தார். பின்னர் சுவாமி நம்மாழ்வாருக்கு மதுரகவி ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 9 பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளும் கருட சேவை நடந்தது.

திருவிழாவின் உச்சநிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம் நடந்தது. காலை 4.15 மணிக்கு திருமஞ்சனம், காலை 4.45 மணிக்கு தீபாராதனை, காலை 5.30 மணிக்கு நித்தியல் கோஷ்டி, காலை 6.30 மணிக்கு நம்மாழ்வார் பல்லக்கில் புறப்பட்டு, காலை 7 மணிக்கு நம்மாழ்வார் தேரில் எழுந்தருளினார். 

அவருக்கு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 7.45 மணிக்கு நாங்குனேரி ஜீயர் ஸ்வாமி வடம் பிடிக்க தேரோட்டம் தொடங்கியது. அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா கோபாலா’ கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் மேலரத வீதியில் தொடங்கி வடக்கு ரத வீதி, கீழரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக காலை 9.30 மணிக்கு நிலைக்கு வந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் குடும்பத்தினருடன் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜமூர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டு இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory