» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 2½ வயது குழந்தை திடீர் மரணம் : போலீஸ் விசாரணை
புதன் 4, ஜூன் 2025 8:19:34 PM (IST)
தூத்துக்குடியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2½ வயது குழந்தை திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி செய்யது சபீனா. இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் ஷாஜினி சாரா என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில்,இன்று அருண்குமார் வேலைக்குச் சென்று விட்டார்.
வீட்டில் செய்யது சபீனா வேலை செய்து கொண்டிருக்கும் போது பக்கத்து அறையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிப்போய் பார்த்துள்ளார். அப்போது குழந்தை மயங்கிய நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.
அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தையை கொண்டு வந்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், டிவி அருகே உள்ள மின்சார வயரில் குழந்தையின் கை பட்டதில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










