» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய சாலையை சீரமைக்க கோரிக்கை!
புதன் 4, ஜூன் 2025 3:39:37 PM (IST)

தூத்துக்குடியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி சண்முகபுரம் 1வது, 2வது தெரு, மற்றும் வண்ணார் தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டது. பைப் லைன் பதித்த பின்னர் குழிகளை சரவர மூடாமல், சமன்படுத்தாமல், உடைக்கப்பட்ட சாலை கழிவுகளை அப்படியே போட்டுச் சென்றுவிட்டனர். இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதில் பகல் நேரத்தில் நடந்து செல்பவர்கள் கூட பலர் தடுமாறி கீழே விழுந்துள்ளனர். காலை, மற்றும் மாலை வேளைகளில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்பவர்கள், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்க நேரிடுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று குழிகளை சமன் செய்து, மீதமுள்ள தார் சாலை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
KumarJun 4, 2025 - 04:08:57 PM | Posted IP 162.1*****
எல்லா இடத்திலும் அதர் சாலை அமைத்தாகிவிட்டதாக அறிக்கை விடும் அதிகாரிகள் இங்கு இருசக்கர வாகனத்தில் வரவேண்டும்
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)











KumarJun 4, 2025 - 04:09:50 PM | Posted IP 162.1*****