» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு
சனி 31, மே 2025 3:22:56 PM (IST)

தூத்துக்குடியில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் சாமுவேல்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் மேயர் ஜெகன் பொியசாமி, ஆணையா் மதுபாலன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் மேயா் ஜெகன் கூறுகையில் "தமிழக முதல்வர் உத்தரவுப்படி பள்ளி தோ்வுக்குபின் கோடை விடுமுறை முடிந்து திங்கள் கிழமை பள்ளி திறக்கப்படும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி எல்லா பள்ளிகளிலும் எதிர்கால தலைமுறையினரான மாணவ மாணவிகள் நலன் கருதி பள்ளியில் உள்ள நிர்தேக்க தொட்டி கழிவறை விளையாட்டு மைதானம் மற்றும் ஆங்கில வழி கல்வி அறைகள் உள்ளிட்டவைகளை முழமையாக ஆய்வு செய்தோம். தேவையற்ற இடங்களில் இருக்கும் தேவையற்ற பொருட்களையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளோம் தற்போது மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை தேவையான அனைத்து கட்டமைப்புகளும் தற்போதைய காலத்திற்கு ஏற்ப செய்து கொடுத்துள்ளோம்.
அதனால் கடந்த ஆண்டு முதல் மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கு அதிகாித்துள்ளது. இரண்டு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று பலா் சாதனை படைத்துள்ளனா். அதே போல் திறனாய்வு தோ்வின் மூலமும் தோ்ச்சி பெற்றவா்களை ெகளரவித்துள்ளோம். எதிர்கால தலைமைமுறையினாின் நலன் கருதி நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி கொடுத்து கல்வியின் தரத்தையும் உயர்த்தும் வகையில் தலைமை ஆசிாியா், உதவி ஆசிாியா்கள், ஆசிாியா்கள் நல்லமுறையில் பணியாற்றி வருகின்றனா்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லாதுறையையும் சிறப்பான முறையில் கண்காணித்து வழிநடத்தி செல்கிறாா். இருந்த போதும் கல்வியும் மருத்துவமும் எனக்கு இரண்டு கண்கள் என்று அரசு விழாக்களில் தொிவிப்பாா் கல்விக்கென்று கூடுதல் நிதி ஓதுக்கீடு செய்து எழுத்தறிவு படிப்பறிவு இல்லாதவர்கள் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்கு உழைப்பதை போல் நாங்களும் மாநகராட்சி பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் நலன் கருதி எல்லா பணிகளையும் துணையாக இருந்து செய்து கொடுக்கிறோம். எல்லா பள்ளிகளும் திறப்பதற்கு தயாராக உள்ளனா்.
மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஓத்துழைப்பது போல் நல்லமுறையில் செயல்படும் மாநகராட்சி பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்து பலனடைய வேண்டும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தமிழ் ஆங்கில வழி கல்விகள் நல்லமுறையில் ஆசிாியா்கள் மூலம் வழங்கப்படுகிறது. இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனின் பேரில் 2021ம் ஆண்டு மாநகராட்சி பள்ளிகளில் 100 மாணவர்கள் தான் படித்து வந்தனர் ஆனால் தற்போது ஒவ்வொரு மாநகராட்சி பள்ளியிலும் 900 முதல் 1200 பேர் படித்து வருகின்றனர் இது தமிழக முதலமைச்சருக்கு கிடைத்த மாபெரும் சாதனையாகும் சில பள்ளிகளில் புதிய வகுப்பறைகளும் கட்டப்பட இருக்கின்றன என்று கூறினாா்.
பின்னா் அம்பேத்கா் நகா் பகுதியில் நடைபெறும் பணிகளையும் சிவ அரசு பள்ளிகளில் ஆய்வுகளையும் நான்கு மணி நேரத்திற்கு மேலாக மாநகா் முழுவதும் மேற்கொண்டாா். அப்போது சாமுவேல்புரம் பகுதியில் உள்ள ஓரு மாணவன் உங்களோடு நான் ஓரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும். என்று மேயாிடம் கேட்டுக்கொண்டாா். உடனடியாக அவனை மேயரும் ஆணையரும் அரவணைத்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனா் பின்னா நல்ல பழக்க வழக்கத்துடன் படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினாா்கள்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி இளநிலை பொறியாளர் சரவணன், நகர அமைப்பு திட்ட உதவி பொறியாளர் முனீர் அகமது, வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ். சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், சுகாதார ஆய்வாளா்கள் ராஜசேகா், ராஜபாண்டி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ். ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










