» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதை ஆசாமி ஓட்டி வந்த கார் மோதி 3பேர் காயம்: வாகனங்கள் சேதம் - தூத்துக்குடியில் பரபரப்பு!

வெள்ளி 30, மே 2025 4:12:41 PM (IST)



தூத்துக்குடியில் போதை ஆசாமி ஓட்டி வந்த கார் மோதியதில் நடைபாதையில் நின்று கொண்டிருந்த கட்டிட தொழிலாளர்கள் 3பேர் படுகாயம் அடைந்தனர். இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. 

தூத்துக்குடி விஇ ரோட்டில் சுகம் ஓட்டல் அருகே உள்ள நடைபாதை பகுதியில் தினமும் காலை ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக காத்து நிற்பார்கள். இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் மது போதையில் ஒருவர் ஓட்டி வந்த கார் நடைபாதையில் ஏறி அங்கு நிறுத்தியருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி அருகே இருந்த டீக்கடை மீது மோதி நின்றது. 

இந்த விபத்தில் நடைபாதையில் நின்று கொண்டிருந்த கட்டிட தொழிலாளர்கள் முருகானந்தம், சக்தி உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.‌ இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அங்கே இருந்தவர்கள் விபத்து ஏற்படுத்திய நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

போலீசார் அவரை மத்திய பாகம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


மக்கள் கருத்து

மக்கள்Jun 1, 2025 - 07:24:50 PM | Posted IP 172.7*****

யார் அந்த நபர்

தமிழன்மே 30, 2025 - 06:42:11 PM | Posted IP 162.1*****

வாழ்க டாஸ்மாக் வாழ்க திராவிடம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory