» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்டோ - கார் மோதிய விபத்தில் தேமுதிக நிர்வாகி பலி : நண்பர்கள் 2பேர் காயம்
வியாழன் 29, மே 2025 11:23:03 AM (IST)
தூத்துக்குடி அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் தேமுதிக நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 2பேர் காயம் அடைந்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள குளத்தூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கருப்பசாமி (42), இவர் அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக பிரதிநிதியாக உள்ளார். நேற்று தனக்கு சொந்தமான ஆட்டோவில் நண்பர்கள் 2பேருடன் தூத்துக்குடிக்கு வந்துள்ளார். பின்னர் அவர் குளத்தூருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலை கல்மேடு அருகே சென்று கொண்டிருந்தபோது திருச்செந்தூரில் இருந்து முதுகுளத்தூர் நோக்கி சென்ற ஒரு கார் ஆட்டோ மீது மோதியது. இவ்விபத்தில் ஆட்டோவை ஓட்டி வந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் ஆட்டோவில் வந்த 2 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தருவைகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். கருப்பசாமி உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த முதுகுளத்தூரைச் சேர்ந்த திருமுருகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










