» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவியை சூடுவைத்து துன்புறுத்திய கணவர் கைது: தாய், சகோதரிக்கு போலீஸ் வலைவீச்சு!

செவ்வாய் 27, மே 2025 8:04:50 PM (IST)

தூத்துக்குடியில் தோசை கரண்டியால் மனைவியை சூடு வைத்து துன்புறுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். அவரது தாய் மற்றும் சகோதரியை தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் செல்வ அந்தோணி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அண்ணா நகரைச் சேர்ந்த சேர்ந்த சிந்துஜா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும் 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். 

நேதாஜி நகரில் வீட்டின் கீழ் பகுதியில் சிந்துஜா - செல்வ அந்தோணி குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில் மேல் மாடி வீட்டில் செல்வ அந்தோணியின் தாயார் மாரியம்மாள் மற்றும் சகோதரி செல்வவள்ளி மற்றும் அவரது கணவர் ஜெயராஜ் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் செல்வ அந்தோணி குடித்துவிட்டு சிந்துஜாவை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் மாமியார் மாரியம்மாள், மற்றும் மதினி செல்வ வள்ளியும் அவரை துன்புறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிந்துஜாவிடம் உனது குடும்ப சொத்தில் பங்கு வேண்டும் என்று கூறி அவரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் செல்வ அந்தோணிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதை சிந்துஜா கேட்டதற்கும் அவரை அடித்து துன்புறுத்தி உள்ளனர் 

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி செல்வ அந்தோணி, மாரியம்மாள், செல்வ வள்ளி ஆகியோர் சிந்துஜாவை அடித்தும், தோசை கரண்டி மூலம் முகம் மற்றும் வாயில் சூடு வைத்தும் துன்புறுத்தி உள்ளனர். இந்த விஷயம் சிந்துஜாவின் குடும்பத்தினருக்கு தெரியக்கூடாது என்பதற்காக அவரை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பூட்டி வைத்ததுடன். அவரிடம் செல்போனை பிடுங்கி தனிமைச் சிறையில் வைத்துள்ளனர் 

இந்நிலையில் கடந்த மே 20 ஆம் தேதி சிந்துஜாவின் வீட்டிற்கு சென்ற அவரது குடும்பத்தினர் சிந்துஜாவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து சிந்துஜாவை செல்வ அந்தோணியின் வீட்டிலிருந்து மீட்டு உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் 

இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிந்து செல்வ அந்தோணியை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மாரியம்மாள், மற்றும் செல்வ வள்ளியை தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் சொத்தில் பங்கு கேட்டு மனைவியை கணவரின் குடும்பத்தினர் சூடு வைத்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory