» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாளை திருமணம்: காதல் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை - தூத்துக்குடி அருகே சோகம்!!
சனி 24, மே 2025 11:36:45 AM (IST)
தூத்துக்குடி அருகே நாளை காலை திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர், மேலமடம், கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் சரண்யா (23). இவர் பசுவந்தனை அருகேயுள்ள போடிநாயக்கனூரில் மக்கள் நல பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தாய் - தந்தை இல்லாததால் தனது அக்கா வீட்டில் வசித்து வந்தார்
இதற்கிடையே சரண்யா அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்ததாக தெரிகிறது. ஆனால் அவரது அக்கா, வேறு ஒருவருடன் திருமணம் பேசி முடித்துள்ளார். நாளை (25ஆம் தேதி) திருமணம் நடக்க இருந்த நிலையில் இவர்களது காதல் விவரத்தில் நேற்று தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சரண்யா நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறத்து தகதவல் அறிந்து புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)











Mmmssssமே 25, 2025 - 11:05:03 AM | Posted IP 162.1*****