» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பணம் பறிக்கும் நோக்கத்துடன் இளம்பெண் பாலியல் புகார் : கைதான வாலிபரின் தாய் குற்றச்சாட்டு!

வியாழன் 22, மே 2025 3:37:32 PM (IST)

தூத்துக்குடியில் பாெய்யான பாலியல் புகார் கூறி தனது மகனை இளம் விதவைப் பெண் சிக்க வைத்திருப்பதாக பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வாலிபரின் தாய் குற்றம்சாட்டியுள்ளார். 

தூத்துக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் விதவைப் பெண்ணை ஏமாற்றி மோசடி செய்ததுடன் குளிர்பானத்தின் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்ச்சி செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக வாலிபர் மீது இளம் விதவைப் பெண் அளித்த புகாரில் அஜித்குமார் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

இதைத்தொடர்ந்து அஜித்குமாரின் சகோதரி வளர்மதி தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் இளம் விதவைப் பெண் மற்றும் அவருடன் சேர்ந்து குணா என்ற நபர் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக அளித்த புகாரின் பேரில் இளம் விதவை பெண் மற்றும் குணா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜித்குமார் என்பவரின் தாய் உமா மகேஸ்வரி தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் தனது மகன் அஜித்குமாருக்கும் இளம் விதவைப் பெண்ணுக்கும் 11 வயது வித்தியாசம் உள்ளது. ஆனால் எனது மகனிடம் இளம் விதை பெண் பழகியது உண்மைதான். அது அந்தப் பகுதியை சேர்ந்த அனைவருக்கும் தெரிந்ததுதான். 

அவர்கள் இருவரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்றதும் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஆதாரமும் தன்னிடம் உள்ளதாக தெரிவித்த அவர் வயது வித்தியாசம் காரணமாக பழக்கத்தை விடுமாறு தான் சத்தம் போட்டதாக தெரிவித்தார். ஆனால் அவரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்று விதவைப் பெண் கூறிய குற்றச்சாட்டு உண்மை கிடையாது. பொய்யான புகார் அளித்துள்ளார். பணம் பறிக்கும் நோக்கத்துடன் இவ்வாறு செயல்பட்டு வரும் அவர் மீது காவல்துறையினர் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்

ஏற்கனவே இளம் விதவைப் பெண் தனது சகோதரர் மீது அவரையும் அவரது தந்தையையும் தாக்கியதாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது இந்த பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து புகார் அளிக்காதது ஏன்? எனவே பணம் பறிக்கும் நோக்கத்துடன் தான் அவர் செயல்பட்டு வருகிறார். எனவே அவர் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஜித் குமாரின் சகோதரி வளர்மதி தெரிவித்தார். 


மக்கள் கருத்து

NAAN THAANமே 23, 2025 - 07:45:43 PM | Posted IP 104.2*****

GOLD VILAIKU ENTHA AATHAA MAGANA VITTU KODUPPAA...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory