» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காமநாயக்கன்பட்டியில் புறக்காவல் நிலையம்: எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்!

வியாழன் 22, மே 2025 10:47:46 AM (IST)



காமநாயக்கன்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமநாயக்கன்பட்டியில் காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். 

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில்,  பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது இப்பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளித்து தங்களது குறைகளை இங்கு நிவர்த்தி செய்து கொள்ளாலம். மேலும் உங்கள் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி குற்ற நிகழ்வுகள்  நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

விழாவில் கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உட்பட காவல்துறையினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory