» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மெஞ்ஞானபுரம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை : போலீஸ் விசாரணை
புதன் 21, மே 2025 8:55:15 AM (IST)
மெஞ்ஞானபுரம் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (35) கல்கண்டு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். உடன்குடி கந்த புரத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள். பனை தோழிலாளியான இவருக்கும் ஜெயபாலுக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கொட்டங்காடு ஊரில் வைத்து ஜெயபாலுக்கும் சிவ பெருமாளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு ஜெயபால் கந்தபுரத்தில் இருந்து ராமசாமிபுரத்துக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்டு சிவபெருமான் தம்பி மோகன் (25) பின்னால் சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயபால் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










