» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
புதன் 21, மே 2025 8:49:35 AM (IST)

தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற பேரவை மாவட்ட செயலாளர் சுசி.ரவீந்திரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 4 தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும், அரசு துறைகளில் பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, நிரந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் முனியசாமி மணவாளன், ரவி தாகூர் சங்கரன், காசி, சிவபெருமான் உப்பு சங்க மாவட்ட தலைவர் பொன்ராஜ், ஏஐடியுசி சார்பில் மாவட்ட பொருளாளர் பாலசிங்கம், நகர்மன்ற உறுப்பினர் தனலட்சுமி ராஜ்குமார் ஹெச் எம் எஸ் சார்பில் மாவட்ட தலைவர் ராஜ்குமார், ராஜலட்சுமி ஹெச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கம் மாவட்ட தலைவர் டாக்டர் ராஜலக்ஷ்மி துணைத் தலைவர் ராதா, ஐஎன்டியுசி மாநில துணைத் தலைவர் ராஜ், பாலகிருஷ்ணன், சுரேஷ்குமார் தொமுச சார்பில் முருகன், கருப்பசாமி, ராமசாமி, ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் அம்ஜத், மாவட்ட செயலாளர் சிவராமன், சகாயம், முருகன் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










