» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில் திருவிழா: உடலில் சேற்றை பூசி பக்தர்கள் வழிபாடு!

சனி 17, மே 2025 9:19:52 AM (IST)



எட்டயபுரம் அருகே சோழபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் விழாவில் உடலில் சேற்றை பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சோழபுரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பக்தர்கள் 108 இளநீர் மற்றும் 210 பால்குடங்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு 9 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் சிகர நாளான நேற்று முன்தினம் காலையில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக ஊர் பொது கண்மாய்க்கு சென்று தங்களது உடலில் சேறு பூசிக்கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் கைகளில் வேப்பிலையை ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளம் முழங்க ஆடிப்பாடியவாறு சென்று கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவதால் இயற்கை சீற்றம் தணியும், வேளாண்மை செழிக்கும், நோய்கள் நெருங்காது என்று பக்தர்கள் தெரிவித்தனர். விழாவின் நிறைவு நாளான நேற்று மதியம் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து

என்னமே 17, 2025 - 11:45:21 AM | Posted IP 172.7*****

கொடுமை சரவணன் இது

Superமே 17, 2025 - 11:35:30 AM | Posted IP 162.1*****

Om Sakthi

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory